காதல் SYLLABUS

அழகாய் இருப்பதால்
ஒரு பெண் மேல் வருவதல்ல
காதல்,
அது
வெறும் INFATUATION...

ஒரு பெண்ணை சந்தித்தபின்
விலகிச்சென்றால்
அவள் மனம் வருந்துவாள் என்பதற்காக
அவள் மேல் காதல் வந்தால்
அதுவும் காதல் இல்லை,
வெறும் CHARITY....

எல்லா விஷயங்களையும்
அவளிடம் பகிர்ந்து கொள்கிறேன்...
அதனாலேயே
அவளை நான்
காதலிக்கிறேன் என்று
நீங்கள்
நினைத்தால் அதுவும் காதல் இல்லை..
JUST FRIENDSHIP...

ஆனால்
அவளுடைய துக்கங்கள்
அவளை விடவும்
உங்களை அதிகமா பாதித்து
அவளுக்காக நீங்கள் வருந்தி
கண்ணீர்விட்டால்

அது தான் காதல்...

வேறு எந்த பெண்ணாலும்
நீங்கள் கவரப்பட்டாலும்
எந்த காரணமும் இல்லாமல்
நீங்கள் அவள் கூடவே இருக்க
விரும்பினால்

அது தான்,

தெய்வீக காதல்.

எழுதியவர் : செல்வமணி (30-Oct-15, 2:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 104

மேலே