பட்டியல் பெறுவீர் பாதுகாப்பிற்கு

மூங்கையராய் இருப்பதும்
ஒரு வகைப் பாதுகாப்பே

ஆதாம் ஏவாளுக்கு
தவிர்க்கப்பட்ட கனி போல
நமக்கும் தவிர்க்கப்படவேண்டிய
உணவுப் பண்டங்களின் பட்டியலை
அதிகாரத்தைக் கையிலெடுத்துக்
கொள்(ல்)பவரிடமிருந்து பெற்று
அதன்படி சமைத்து உண்பதே
நம் உயிருக்கும் உடமைக்கும்
உத்தரவாதமான பாதுகாப்பு.

நம் தலையெழுத்தை வதந்தியால்
விஷமிகள் யாரேனும் மாற்றினால்
நம்மைக் காப்பாற்ற
நம்மைப் படைத்தவனும்
செய்வதறியாது திகைப்பான்

எமதர்ம ராஜனுக்குத் தான்
எதிர்பாராத கொண்டாட்டம்
ஆடி அடங்கும் வாழ்க்கையில்
ஆறடி குழியிலும் புதைபடாமல்
எரிந்து சாம்பலாகி
மண்ணுலகைத் துறக்கலாம்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மூங்கையர்=பேச்சுத் திறன் இல்லாதார் (ஊமையர்)

எழுதியவர் : மலர் (30-Oct-15, 4:44 pm)
பார்வை : 57

மேலே