சூனியக்காரிகள்
சூனியக்காரிகள்
அழகானவர்கள்...
அவர்களின் கண்களில்
பச்சை வாசம் வீசும்...
நீலம் பூத்த உடலோடு
கதவு தட்டும்
நள்ளிரவில் அவர்கள்
பெருங்கதைக்காரர்கள்...
நீளும் பற்களில்
சொட்டும் விஷங்களின்
தூய்மைக்குள்
குருதியின் சுவை...
விரிந்து கிடக்கும்
கூந்தலில் கற்றைக்குள்
சாம்பலின் வர்ணம்
புது வண்ணம்...
அகல விரிந்த கால்களோடு
சம்மணமிட்டு
தலை திருப்பும் நொடியில்
சாத்தானாய் மாறுவது
பொன்னிற கணம்...
வடித்தலின் நொதிப்போடு
நுரைகளின் வெடிப்போடு
கண்கள் கதற வாய் கத்தும்
பொழுதுகளில் விரல்களில்
விளையாடும் மையும்
மண்டை ஓடும்
பகிரங்க
இச்சை வார்க்கும்...
ஒளிந்து நின்று
பாருங்கள்...
இன்னும் அழகாய்
தெரிவார்கள்
சூன்யக்காரிகள்...
கவிஜி