நானும் குபேரன்

இருந்த பணத்தை செலவுசெய்து
உன்னை வாங்கி ஊதாரியாகிவிட்டதாக
சிரிக்கிறாயோ?

உழைத்தாலும் வாராத செல்வம்
உன்னை வாங்கினால் பெருகுமென்று
உன்னை உருவாக்கியவனின்
விற்பனை தந்திரத்தை எண்ணி
தொந்திக் குலுங்கச் சிரிக்கிறாயோ?

சிரி சிரி...
பொம்மைகளில் உயிரை வைத்திருக்கும்
விஷயத்தில் நானும் குபேரன் என்னும்
உண்மை புரியுவரை மட்டுமல்ல
அதை விளையாடி உடைக்கும்
குழந்தை செல்வத்தை பெருக்கிவிட்ட
உண்மையையும் புரிந்து சிரி.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (31-Oct-15, 1:58 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : naanum kupEran
பார்வை : 158

மேலே