ஏன், என்ன என்ற கேள்வியே உங்கள் நிம்மதியை அழிக்கிறது
எதையுமே எதிர்த்து கேள்வி கேட்பது என்றால் என்னவென்றே தெரியாத இளவயதில் நிம்மதியாக இருக்கும் குழந்தைகள் எப்பொழுது சினிமாவில் உள்ள கதாநாயகர்கள், பகுத்தறிவாதிகள் முதலியோரின் சமுதாய அக்கறை கொண்ட புரட்சிகரமான பேச்சுகளையும், மதங்கள் சொல்லி கொடுக்கும் நியாயம் அநியாயம் போன்ற விசயங்களையும்
எப்பொழுது நாம் நம்ப ஆரம்பிக்கிறோமோ, அதன் விளைவாக அநியாயம் என்று நாம் நம்பும் விசயங்களை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிக்கிறோமோ,
அப்பொழுதிலிருந்தே நம் நிம்மதியை நாம் இழப்பதோடு, நம்மை சுற்றி இருப்பவர்களின் நிம்மதியை கெடுப்பதற்கும் நாம் காரணமாகி விடுகிறோம்.
நம் நிம்மதியை அழிக்கும் இந்த மூல விதையை அடையாளம் கண்டு அதன் நல்லது கெட்டதில் நாம் பங்கு ஏற்று சாதிக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை என்பதை நம்பவும் வீண் தர்க்கம் செய்து சமுதாயத்தை சீர் செய்ய முயற்சி செய்தவர்களின் வாழ்க்கை மாற்றம் எண்ண மாற்றம் எப்படி என்பதை புரிந்து கொள்ள வேண்டியதுவும் தான் இன்றைய சூழ்நிலை. நம் நாட்டைகாக்க லட்சக்கணக்கில் போர் வீரர்கள் தேவை என்றாலும் நாட்டையும் சமூகத்தையும் சீர் படுத்த தலைவர்கள் லட்சக்கணக்கில் தேவையில்லை; அப்படி இருந்தால் இன்னும் பிரச்சனை தான்;
நம் வாழ்க்கைக்கு சிறந்த வழியை தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான மனநிலையில் வாழப் பழகுவோம்.
இது போன்று தவறு செய்யும் மற்றவர்களையும் நிம்மதியற்ற வாழ்க்கையில் இருந்து காப்பாற்ற உதவுவோம்.