கொழுப்புக்கு_குட்பை_சொல்லும்_கத்ரிக்காய்
![](https://eluthu.com/images/loading.gif)
சாதாரணமாக எல்லா சீசன்களிலும், குறைந்த விலையில் கிடைக்கும் காய் கத்திரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் மிகவும் ருசியானது. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், கால்சியம் இதில் நிறைந்துள்ளது.
வைட்டமின் அதிகமாக இருப்பதால், நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்கும். வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல் பருமன் ஆகியவற்றுக்கு நல்லது. கத்தரிக்காயை பிஞ்சாக சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால், உடம்பில் அரிப்பு ஏற்படும். வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும்.
வெப்ப மண்டல பகுதிகளில் விளையும் காய் என்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கத்தரிக்காய் முழுமையாக குறைக்கும். 100 கிராம் கத்தரிக்காயில், 24 சதவிதம் கலோரிகள், 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. கருநீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.
ஆந்தோசயானின் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும். கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் மிகவும் உகந்தவை.
தக்காளிக்கு இணையான இக்காய், தக்காளியைப் போலவே புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன உள்ளன. பசியின்மையை போக்கி, உடல் சோர்வை குறைக்கும். மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவற்றையும் தடுக்கும். பார்வைத் திறனும் அதிகரிக்கும்.
உடல் சூட்டை அதிகரிக்க செய்யும் காய் என்பதால், மழை காலம், குளிர்காலம் மற்றும் இரவு நேரங்களில் கூட சாப்பிடலாம். உடல் கதகதப்பாக இருக்க கத்தரிக்காய் குழம்பு, பொரியல் நல்லது. கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும்.
உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிட கூடாது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணி, புண்கள் ஆற அதிக நாள் ஆகி விடும்.
மற்றவர்கள், மருந்தை போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெறலாம். இக்காய் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து ஜீரணம் ஆகிகிறது; சத்தாக மாறி உடலுக்கு பயன் தரும். நல்ல உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு, உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தரும்.