தோப்புக்கரணம்

பிள்ளையார் முன், பக்தர்கள் எனப்படுபவர்கள் நின்று காதுகளை, கைமாறிப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் (தலையில்) குட்டிக் கொள்வதும் முன்னர் வழக்கம்.

இப்படி ஏன் செய்கிறார்கள் என்பதற்குரிய ஒரு புராணக் கதை –கஜமுகாசுரன், வினாயகர் போன்ற தோற்றத்துடன் பிறந்தவனாம்.

இந்திரன் முதலிய தேவர்களைப் பிடித்து, தன் முன் நிற்க வைத்து, தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தானாம். விநாயகர் அந்த கஜமுகா சுரனை அழித்தாராம்.

இந்த அசுரன் சாகும் முன் - தன் முன் இந்திரன் முதலியவர்கள் தோப்புக்கரணம் போட்டதும், தலையில் குட்டிக் கொண் டதும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம்.

இதன்படி விநாயகர், தன்னைக் கும்பிடுபவர்கள் இப்படித் தன் முன் தோப்புக்கரணம் போடவும் தலையில் குட்டிக் கொள்ளவும் கேட்டுக் கொண்டாராம். இதனால் விநாயக பக்தர்களும் இப்படிச் செய்து வருகிறார்களாம். .

அசுரன், தண்டிக்க தோப்புக்கரணம் போடச் செய்தான். மனித பக்தர்கள் இப்படித் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொண்டால், தங்களைத் தாங் களே அவமானப்படுத்திக் கொள்வதும், தண்டித்துக் கொள்வதும் ஆகாதா? ஆகாது என்கிறது மருத்துவம்.

இந்தப் பிள்ளையார் தன்னைக் கும்பிடும் மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவு ஊட்டுவதாக நம்பப்படுகிறது. இப்போது கூட துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை இப்படிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்வது இருக்கிறது, இருக்கலாம்....இருக்கவேண்டும்.

கைகள் மாறி காதுகளைப் பிடித்து அமர்ந்து அமர்ந்து எழும்போது மூளைக்கு ரத்த ஓட்டம் விருத்தி ஆகி அந்த இளவயதில் ஞாபகத்திறன் அதிகரிக்குமாம். கால்களுக்கும் பலம் கிடைக்குமாம்.

ஒரு டாக்டர் நண்பர் சொன்னது. அது மட்டுமின்றி மாடர்ன் ஜிம்மில் எல்லாம் இதுக்குப் பேர் பைடெக். புராணங்கள், பழமொழிகள், ஒரு சில அந்தக் கால பழக்கவழக்கங்கள், இதிலெல்லாம் ஏதேனும் அர்த்தம் இருக்கும்.

நாத்திகம், ஆத்திகம் பற்றி பேசுவதை விட இந்த மாதிரி இதில் உள்ள நோக்கங்களை எல்லா கோணத்திலும் ஆராய்ந்தால் நன்றாக இருக்கும். புராணத்தில் உள்ள கெட்டவர்கள் வாழ்விலும் ஒரு symbolism இருக்கிறது. அது என்ன என்று புரிய முற்படுதல் என்பது தமிழ் இலக்கியம் படித்தல் அல்ல..........வாழ்வின் இலக்கணம் புரிதல். அந்த அசுரன் ஏன் அப்படி ஒரு தண்டனையை தேவர்களுக்கு கொடுக்க வேண்டும்? வேறு தண்டனைகளே கிடைத்திருக்காதா?

ஆனால் இன்றைக்கெல்லாம் தோப்புக்கரணம் எக்ஸர்சைசா போடச்சொன்னா ஓகே. இதையே தண்டனையா கொடுத்தாக்க அந்த ஆசிரியருக்கு ஆப்புதான்.

எனக்கு எப்படி இவ்வளவு ஞாபக சக்தி என்பது இப்போதுதான் புரிகிறது.

(கொஞ்சம் திருத்தங்களுடன் 'மீள்')

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (1-Nov-15, 3:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 124

மேலே