ஆரோக்கியமாக பேச மாட்டாயா

அன்பே நீ என்ன தினசரி பத்திரிகையா ..?
தலைப்பு செய்திபோல் திடீரென பேசுகிறாய் ..?
சிறு விளம்பர பகுதிபோல் சிலநேரம் பேசுகிறாய் ..?
நடுப்பகுதிபோல் கவர்ச்சியாக பேசுகிறாய் ..?

மரணறிவித்தல் போல் சோகமாக பேசுகிறாய் ..?
அரசியல் பகுதிபோல் அடிதடியாக பேசுகிறாய் ..?
சினிமாபகுதிபோல் சிரித்து பேசுகிறாய் ..?
விளையாட்டு பகுதிபோல் விளையாட்டாக பேசுகிறாய் ..?

ஆரோக்கிய பகுதிபோல் ஆரோக்கியமாக பேச மாட்டாயா ..?

ஆக்கம் ; கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Nov-15, 2:02 am)
பார்வை : 81

மேலே