காதல் நினைவுக்கறைகள்

நினைவலைகளை
கண்ணீரில் கரைத்து
கடற்கரையில்
விட்டு விட வந்தேன்,

கனத்த இதயமெங்கும்
காதல் சாயம் போகாமல்
பழுத்த மனதினில்
பழுப்பு நிறங்களாய்
பாவை உந்தன்
வெளுத்துப்போன
வண்ணக்கோலங்கள்...

கனவு சுரங்கங்களில் தேங்கிய
காதல் நீராக .......
நீ விடுத்து போன
புன்னகை துளிகள்

இன்னமும்
தொட்டுப்பார்க்கும் போது
சிலிர்த்த வண்ணம்

என் நினைவுச்சக்கரத்தை
பின்னோட்டமாக
சுற்றும் சமயத்தில்...

அனாதையான காதல்
மனமெல்லாம்
அரிக்குதுதடி
அழகான தருணங்களையும்
அசத்திய வருடல்களையும்
கனவாய்
புதைத்து விட்டு
காலம் அதை
கழுகாய் கொத்தி செல்ல
விட்டு விட ஏசும்
என் அகம்
தோற்றுக்கொண்டிருக்கிறதே,
இன்னமும் அழியாத
ஆழ்மனத்தில்
தொடர்ந்து வரும்
உன் புறத்திடம்..!

எழுதியவர் : செல்வமணி (2-Nov-15, 11:34 pm)
பார்வை : 444

மேலே