மொட்டைமாடி

மொட்டை மாடி:
ராத்திரி இருட்டின்
வெட்ட வெளி நிலம்
நாலும் நிறைவேறும்
தகிடுதத்த களம்!!!

மொட்டைமாடி:
மின்சார பிணக்கிற்கு
காற்று வெளியின்
வான வழி கணக்கு!!!

மொட்டைமாடி:
அக்கம்பக்க வீடுகளின்
துணி உலரும் காட்சியில்
மனம் காயும் விட்டில்கள்!!!

மொட்டைமாடி:
அண்டை மாமிகள் அளாவளாவும்
வடாக வற்றல் காரல் மாநாடு!!!

மொட்டைமாடி:
சீருக்கும் சாவுக்கும்
சலசலக்கும்
சாமியானா ஒப்பந்தம்!!!

மொட்டைமாடி:
ஒடி ஆடும் விளையாட்டா
ஒளிந்து தேடும் ஏமாற்றா இல்லை
உடல் தேற்றும் யோகாவா
பலம் தேற்றும் தேகப்பயிற்சியா
தேவை ஒரு மொட்டைமாடி!

கோவில் இல்லா ஊருக்கே போயினும்
மொட்டைமாடி இல்லா வீட்டிற்கு குடி போகாதீர்!!!!
வாழ்க மொட்டைமாடி!!!!!!

எழுதியவர் : கானல் நீர் (3-Nov-15, 9:25 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : mottaimaadi
பார்வை : 86

மேலே