மணப்பாடு ஊர்
வலைத்தளம் ஒன்றில்
மணப்பாடு பற்றிய காணொளி ஒன்று பார்த்தேன்.
அதில் ஒரு செய்தி!
அந்த ஊர் மக்கள் சிலரை
கோவா பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் ---
இதுதான் எங்கள் கோவா என்று நிறைவோடு சொல்கிறார்களாம்!
பெருமையுடனும் சொல்கிறார்களாம்!
மணப்பாடு ஊர் மக்கள்
இது எங்கள் கோவா என்று
எப்போதும் சொல்ல வேண்டும்! --- அதற்கு அவர்கள் ---
தெய்வம் அள்ளி வழங்கிய
அந்த ஊர் இயற்கை வளங்களை
விழிப்புடன் காக்க வேண்டும்!
ஒன்றாக செயல்பட வேண்டும்!
செயலால் மேம்படுத்தவும் வேண்டும்!
பக்கத்து ஊர் மக்களும்
சுற்றுலாப் பயணிகளும்
அதற்கு ஒத்துழைக்கவும் வேண்டும்!
உதவிடவும் வேண்டும்!
மணப்பாடு எங்கள் கோவா எனும்
பெருமைமிகு அவர்கள் கூற்றில் ---
ஒரு உண்மை நமக்கு உறைக்கிறது!
அதாவது .... .... ...
நம் தேசத்தில்
ஒவ்வொரு ஊர் மக்களும்
தம் ஊர் இயற்கை வளம் காத்து
ஆக்கபூர்வ சிந்தனை செயல்களால்
மேம்படுத்தவும் செய்தால் ---
ஒவ்வொரு ஊரும் சுற்றுலாத்தலம் ஆகலாம்!
அவ்வாறு ஆக்கினால் --
எந்தக் குன்று ஊர் மக்களும் இது எங்கள் கொடைக்கானல் எனலாம்!
எந்த அருவி ஊர் மக்களும் இது எங்கள் குற்றாலம் எனலாம்!
எந்த ஏரி ஊர் மக்களும் பெருமையாய் நிமிரலாம்!
தங்கள் ஊர் சுற்றுலாவுக்கு முழங்கி அழைக்கலாம்!
சுற்றுலா தேசம் என்றாலே பாரததேசம்தானென்று
சுற்றியுள்ள நாடுகள் புகழும்படி செய்திடலாம்!
ஊருக்கு ஊர் இன்றே
இந்த சங்கற்பம் ஏற்றல் நன்றே!