பூவே

நான் கொண்ட அன்பை வெறும் காதல் என்று சொல்லிவிட முடியாது..

தாயின் மீது கொண்ட அன்பும்,
சேயின் மீது கொண்ட அன்பும்
ரத்தம் கொண்டு வந்தது...

நீயோ எனக்காகா படைக்கப்பட்ட காற்று
நான் சுவாசிக்கும் நீ
என் உயிர் உள்ளவரை உயிராய்.

நான் மடி சாயும் போது தாயாகவும்,
நீ மடி சாயும் போது என் சேயாகவும்
மாறிவிடுகிறாய்..

பாலில் நனைத்து எடுக்கபட்ட நிலவே..

உன் பிரிவில் சேர்த்து வைத்த கண்ணீரையெல்லாம்
நீ இருக்கும் போது அழுது விட ஆசை...

கண்ணீரைத்துடைக்கவும்,
மார்போடு அனைத்து கொள்ளவும், நீ இருப்பதால்..

வானில் நிலவு இல்லாத நாட்களில்
உன் புன்னகை காட்சிதான்
ஆயிரம் நிலவுகளாய் எனக்கு மட்டும் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது..

நான் சேர்த்து வைத்த அன்பையெல்லாம் காட்டத்தெரியாதவன்,
எழுதிவைத்த கவிதைகளை வாசிக்கத் தெரியாதவன்..

இருந்தாலும் மகிழ்ச்சியடி
என் அன்பும்,
நான் படிக்காத கவிதையும்..


நான் தொலைவில் இருந்தாலும்
உன்னோடு இருப்பதால்.














🌺மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் (4-Nov-15, 8:04 pm)
Tanglish : poove
பார்வை : 147

மேலே