காதல் மைந்தன்

''வெண்ணிலாப் போல் உருமாறி எழுந்தேன்''
வெண்மயில் வெளிச்சத்தைக் கண்டு !

''செவ்வண்டுப் போல் தடுமாறி விழுந்தேன்''
செங்குலத்தில் செந்தாமரைக் கண்டு !

வானவில்லில் வாய்கால் வெட்டி --
கார்மேகம் கரும்பு கவர கந்தர்வ கன்னியாக இருப்பேன் !

பாற்கடலில் பால் திரட்டி --
பாலுறவு சங்கு எடுக்க கடல் கன்னியாக வருவேன் !

காங்கேயம் காளைய அடக்க எதற்க்கு ஜல்லிக்கட்டு ?
மன்மதன் மானைய அடக்க போதும் ஜரிகைப்பட்டு ?

செம்மரக்கட்டையில் செதுக்கிய கித்தார் இசைக் கருவியா ?
சரங்களில் விரல் பதிக்க என் ஆசைக்கு வருவாயா ?

சந்தனக்கட்டையில் செதுக்கிய தேர் சிலைக்கு :-
''ஆலாத்தி கற்பூரம் எதிர்ப்பார்க்கும்''
''ஆளாதல் கற்பும் ஆர்வலிக்கும் ''

அத்தானின் அம்சத்தைப் அண்ணாந்துப் பார்த்து அனுராகம் கூட அனுமதி கேட்டது :-

''அபிநயம் சல்லடையில்'' அபிலாசை நீரை வடித்துக் கொள்ளவா ?
--அல்ல --
''அந்தரங்கம் கல்லறையில்'' ஆர் உயிரை மடித்துக் கொள்ளவா ?

விடலையின் விடாப்பிடியில் விறகு கட்டை கூட விபூதியாகி விடும் !
சல்லாபத்தின் சரளத்தில் சந்தன கட்டை கூட சந்தனமாகி விடும் !

தேன் இனித்ததும் எறும்பு கடி ஏங்கியது --
உன் தேகம் என்ன வெல்லக்கட்டி அருவியா ?

கண் இமைத்ததும் மின்னல் அடி தாங்கியது --
உன் இதயம் என்ன இடிதாங்கி கருவியா ?

''உன் தன்மை தார்கோர்த்து என் கண் மை கூட பாரமானது''
''உன் ஆண்மை ஆர்வலித்து என் பெண்மை கூட பாரமானது''

எழுதியவர் : கவிஞர் வேதா (5-Nov-15, 11:36 am)
பார்வை : 143

மேலே