தோப்புக்கரணம்

தோப்புக்கரணம்

நாங்கள் பாவம்!
எங்களுக்குத்தான் வருடம் முழுவதும்
தண்டனை
சிறு வயதில் குசும்பு செய்யும் போது
அப்பாவிடமிருந்து
தண்டனை
வகுப்பில் சரியாகப் படிக்கவில்லையென்றால்
ஆசிரியரிடமிருந்து
தண்டனை
கல்லூரி வாழ்க்கையில்
சீனியர் மாணவர்களிடமிருந்து
தண்டனை
திருமணத்திற்குப் பின்
மனைவியிடமிருந்து
தண்டனை
குழந்தை பிறந்தவுடன்
குழந்தையிடமிருந்து
தண்டனை
வயதானவுடன்
உடற்பயிற்சி மூலம்
தண்டனை

எழுதியவர் : பெ. பால்முருகன் (5-Nov-15, 10:17 am)
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே