ரயில் பயணியின் காதல்

ஓடும் ரயில்
ஒற்றை இருக்கை
தேடி அமர்ந்தேன்
ஜன்னலில் பாதை
ரசித்து பார்வை திருப்பினேன்
பாவை மீது...

பார்காத போது
பார்த்துக்கொண்டோம்
ஒருவரையொருவர்...

அவள் கடைக்கண்
பார்வை பட்டதும்
குடைக்குள் மழை
பெய்ததாய் நினைத்துக்கொண்டேன்....

பயண களைப்பில்
கண் மூடிட
அவளை ரசித்தேன்
அந்த சில நிமிடங்களில்....

அவள் அருகில்
வந்தமர்ந்தேன்
நிலம் பார்த்த அவள்
கண்கள் எனைப்பார்க்கவில்லை....

மனதால் பேசிக்கொண்டிருந்தபோதே
ரயில் நின்றது...
இறங்கி நடந்தேன்
என் மனதை
அந்த பெயர் தெரியாத
பாவையிடம் விட்டு.....

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 1:01 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 321

மேலே