பதவி உயர்வு

உன் பாதையில்
நான் தனிமையில்
காத்திருந்தேன்...
சீ.! என்று சினுங்கிச்சென்றாய்...

என் காதலை
மொழிபெயர்த்து
கவிதை செய்து
கடிதம் நீட்டினேன்
கடிதம் கசக்கி
பொறுக்கியாக்கிச்சென்றாய்...

சில நாட்கள்
சிடு சிடுவென முறைத்து
பின் சின்ன சிரிப்பு சிரித்து
என்னை காதலனாக்கிச்சென்றாய்...

காலம் பல கழிந்து
கல்யாண பத்திரிக்கை
நீட்டி என்னை
அண்ணாக்கிச்சென்றாய்...

வெட்டியாய்
இருந்த என்னை
கவிஞனாக்கிச்சென்றாய்......

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 1:03 pm)
சேர்த்தது : சந்தோஷ்
Tanglish : padavi uyarvu
பார்வை : 171

மேலே