காதலினால் பேசும் கண்கள் ---- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உன்னழகு பேசுகின்ற உள்ளந் தன்னி லுன்னதமாய் நானிருப்பேன் காண்பாய் நீயே .
பன்மொழிகள் காட்டுகின்றாய் பாங்காய்க் கண்ணே பலநூறு கதைபேசு முன்றன் கண்கள் .
கன்னியுன்றன் காதலினால் கண்ட காட்சி காலமெல்லாம் நீங்காதே என்றும் சாட்சி .
என்மொழிகள் மறந்திடுதே காதல் தீயி லென்செய்வேன் சொல்லிடுவாய் மாற்ற முண்டோ ??

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Nov-15, 1:27 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 103

மேலே