நேர்காணல்

M.ஜெகதீசன்

நேர்காணல்
=========
அது ஒரு முதியோரில்லம். சுமார் 100 முதியோர்கள் அங்கு தங்கியிருந்தனர். அவர்களைக் கவனித்துக்கொள்ள 10 ஆயாக்களும், இரண்டு மருத்துவர்களும், மேலாளர் ஒருவரும், வாட்ச்மேன் ஒருவரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலாளராக இருந்தவர் ஓய்வு பெற்றுவிடவே , வேறு ஒரு மேலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக அன்று நேர்முகத்தேர்வு நடக்க இருந்தது.

சரியாகப் பத்து மணிக்கு நேர்முகத்தேர்வு ஆரம்பிக்க இருந்தது. அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக ஆண்களும் ,பெண்களுமாக 20 பேர் வந்திருந்தனர். செயலாளரின் அறைக்கு முன்பாக இருந்த இருக்கைகளில் அனைவரும் அமர்ந்திருந்தனர். செயலாளரின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். அவர் வந்தபாடில்லை. அனைவரும் ஒருவித மன இறுக்கத்துடன் காணப்பட்டனர். கையில் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்தனர். சரியாகப் 10 மணிக்கு செயலாளர் , அவரது அறையில் நுழைந்தார்.

சிறிதுநேரம் கழித்து இண்டர்வியூ ஆரம்பமானது.

பியூன் வெளியேவந்து ," ரகுராமன் யார் ? உள்ள போங்க ! " என்று சொன்னான்.

ரகுராமன் உள்ளே சென்றார்.

சிறிதுநேரம் கழித்து இண்டர்வியூ முடிந்தவுடன் ரகுராமன் வெளியே வந்தார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். இண்டர்வியூ முடிவுக்காகக் காத்திருந்தார்.

அடுத்து பியூன் வெளியே வந்து, " மாலதி ! " என்று கூப்பிட்டான்.

மாலதி என்ற பெயருடைய அந்தப் பெண் செயலாளரின் அறைக்கு உள்ளே நுழைய யத்தனித்தபோது

திடீரென்று அங்கு வந்திருந்த 20 பேரில் ஒருவன் ," ஐயோ ! அம்மா ! நெஞ்சு வலிக்கிறதே ! நெஞ்சு வலிக்கிறதே ! தாங்க முடியலையே !" என்று சொல்லி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். " என்னை யாராவது மருத்துவ மனையில் சேர்த்துவிடுங்கள் " என்று சொல்லி அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்துக் கெஞ்சினான். அவனுக்கு சுமார் 35 வயதிருக்கும்.

இண்டர்வியூக்கு வந்திருந்தவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவனுக்கு உதவப்போய் , இண்டர்வியூவைத் தவறவிட்டால் , வேலைவாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும் என்று எண்ணி யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை.

மாலதியும் அவனை ஒருகணம் பார்த்தாள். இன்டர்வியூவுக்குப் போவதா அல்லது அவனுக்கு உதவுவதா என்று அவளுக்குத் தெரியவில்லை. சிறிதுநேரம் குழம்பினாள். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தாள். மாலதி அவனருகே விரைந்து சென்றாள்.

" சார் ! கொஞ்சம் பொறுத்துக்கோங்க ! நான் போய் ஒரு ஆட்டோவைக் கூட்டிகிட்டு வர்றேன்." என்று சொல்லிவ்ட்டு மாலதி வெளியே சென்றாள்.

பத்துநிமிடம் கழித்து மாலதி வந்தாள். ஆட்டோ வெளியில் நின்றிருந்தது.

உள்ளே வந்த மாலதிக்கு ஒரே வியப்பு. வலியால் துடித்த அந்த நபர் , சிரித்துக் கொண்டே அங்கு நின்றிருந்தான். அவன் மாலதியைப் பார்த்து,

" வா ! மாலதி ! You are appointed ; உன்ன மாதிரி பொறுப்பு உள்ள ஒருவரைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். உன்ன நம்பி 100 என்ன ! ஆயிரம் முதியவர்களைக் கூட ஒப்படைக்கலாம். நான்தான் இந்த முதியோர் காப்பகத்தை நடத்துகிறேன்." என்று சொன்ன அவர்

" செக்ரட்டரி ! " என்று கூப்பிட்டார்.

செக்ரட்டரி அறையிலிருந்து வெளியே வந்தார்.

" செக்ரட்டரி ! இந்தப் பெண் மாலதிக்கு appointment order கொடுத்திருங்க ! " என்றார்.

" Yes Sir ! " என்றார் செக்ரட்டரி.

செக்ரட்டரி இண்டர்வியூவுக்கு வந்திருந்தவர்களைப் பார்த்து, " Interview is over ! you can go ! " என்றார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (5-Nov-15, 9:05 pm)
பார்வை : 65

மேலே