உபயோகி உதறித் தள்ளு

உபயோகி &உதறித் தள்ளு -என்கிற USE AND தரா

M.Jagadeesan

என்நண்பர் பஜாரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் கடை வைத்திருந்தார். கடைக்கு USE AND THROW என்று பெயர் வைத்திருந்தார். நண்பரைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே அவரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டேன்.

நண்பருடைய பெயர் ஆராவமுதன். என்னைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுடன் வரவேற்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது ஒரு வாடிக்கையாளர் வந்தார்.

" சார்! இந்த Mother board ல் Display வரவில்லை .கொஞ்சம் சர்வீஸ் செய்து தரமுடியுமா?" என்று அவர் கேட்டார்.

நண்பர் அந்த மதர்போர்டை வாங்கிப் பார்த்தார். " சார்! வாரண்டி பீரியட் இருந்ததுன்னா , வாங்குன கடையில பில்லைக் கொடுத்து வேற ஒரு மதர்போர்டு வாங்கிடுங்க; இல்லைன்னா புதுசா ஒன்னு வாங்குறதுதான் நல்லது.இத சர்வீஸ் பண்றது வேஸ்ட் சார்!.இது ரொம்ப பழைய மதர்போர்டு சார். இப்ப டெக்னாலஜி ரொம்பவும் மாறிடிச்சி சார்! எல்லாமே இன்பில்ட்டா வந்துடிச்சி; எனவே இதக் கடாசி எறிஞ்சிட்டு வேற ஒன்னு புதுசா வாங்கிடுங்க! எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம் எல்லாமே USE AND THROW Concept தான் சார்! கெட்டுப் போச்சுன்னா வேற ஒன்னு வாங்குறதுதான் நல்லது. அதனாலதான் என் கடைக்குக் கூட USE AND THROW ன்னு பேர் வச்சிருக்கேன்."

வாடிக்கையாளர் சென்றுவிட்டார். நான் நண்பரைப் பார்த்து," அமுதன் சார்! அப்ப நான் போயிட்டு வரேன். அப்பா அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க.அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா?" என்று கேட்டேன்.

அதற்கு நண்பர்," அவங்களப் பார்த்து ஆறு மாசம் ஆச்சு! " என்றார்.

நான் பதட்டத்துடன் , " ஏன்? என்ன ஆச்சு ?" என்று கேட்க

," என் மனைவிக்கும் , என் பெற்றோர்களுக்கும் ஒத்து வரவில்லை; அதனால அவங்கள முதியோர் இல்லத்துல சேத்துட்டேன்." என்று நண்பர் பதில் சொன்னார்.

இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

நண்பரைப் பார்த்து, " அமுதன்! தப்பு பண்ணிட்டீங்க! உங்களப் பெத்து வளர்த்து ஆளாக்கி இந்த நிலைக்குக் கொண்டு வந்தவங்கள சர்வ சாதரணமா தூக்கி எறிஞ்சிட்டீங்க! உங்க USE AND THROW concept ஐ உங்களுடைய பெற்றோர்கள் விஷயத்திலும் காட்டிட்டீங்க! நாளைக்கு உங்க பையனும் இதே USE AND THROW Cocept-ஐ உங்க கிட்ட காட்டுவான் " என்றேன்

நான் கூறியதைக்கேட்ட நண்பர், தலை நிமிர்ந்து பார்க்காமலேயே எனக்கு விடை கொடுத்தார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (5-Nov-15, 9:03 pm)
பார்வை : 67

மேலே