உழவனின் கண்ணீர்

எங்கே போகிறோம்
நாம் எங்கே போகிறோம்
இனி விடியலும் உண்டோ
அது கானல் நீரோ
வழி கோணல் ஆனதோ

நிலத்தில் அடியில் நீரினை
கொடுத்து வைத்தான் இறைவனே
மனிதன் அதனை உறிஞ்சித்தான்
மகிழ்ச்சியோடு உழுதுண்டான்
காலம் இன்று மாறுதே
நிலத்தில் நீரும் நாறுதே
நல்ல நீரும் விஷமென
மாறிப்போனதே
அது காசும் ஆனதே

உழுதவன் இங்கு அழுகிறான்
வழியில்லாமல் விழிக்கிறான்
சோற்றை நமக்கு தருகிறான்
தன் சோகம் மறைத்து வாழ்கிறான்
குளிர்ச்சியான விஷமதை
குடிக்க தெரிந்த நமக்கெல்லாம்
ஏழை உழவன் நிலையெல்லாம்
தெரியவுமில்லை
தெளிய நேரமும் இல்லை

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (6-Nov-15, 8:14 am)
Tanglish : ulavanin kanneer
பார்வை : 124

மேலே