யுகங்களின் தலையெழுத்து - உதயா

குறையுமென எண்ணிய கண்ணீர்
குன்றா ஆழியாய் பெருக்கெடுக்கிறது
தனியுமென எண்ணிய தாகம்
தரணியையும் தாண்டி நீள்கிறது
பெண்கள் இன்னமும்
பிச்சை கேக்கிறார்கள்
தன் உரிமையை எங்கோ
அச்சதேசத்தில் புதைத்துவிட்டு
பங்களாவை பார்த்து பார்த்து
கனவினில் மட்டும் கட்டிவைத்தே
பாட்டாளி பாடுபட்டே
காணாமல் கருகிபோகிறான்
அனல் கக்கும் உதிரங்கள்
துடிப்பினை கழிவோடு கரைத்துவிட்டு
தொடை நடுங்கி கூட்டங்களாய்
வீணாகும் எச்சையாய் சுற்றுகிறது
பணம் பணமென ஓடியே
வாழ்வின் சொர்க்கத்தை மறந்துவிட்டு
தன் மரணத்தின் கடைசி நொடியில் கதறுகிறான்
தான் மறந்த பாசத்தின் நேசமறிந்து
கடவுளே இல்லையென்றால்
கல்லறை வாழ்க்கை நிச்சயம்
நானே கடவுளென்றால்
அந்த குபேர வாழ்க்கை சாத்தியம்
கலாச்சாரம் நாளுக்கு நாள்
உயர்ந்து கொண்டே செல்கிறது
உடையளவில் ஆதிகாலம் நோக்கி
உள்ளமளவில் அரக்க தேசம் நோக்கி
விடியலை தேடி தேடியே
வாடிய நெஞ்சமெல்லாம்
மரணத்தின் விடியளைதான்
கண்டெடுக்கிறது
மாற்றத்தை தேடி தேடி
பல யுகங்களும் கடக்கிறது
என்றுதான் இந்நிலை மாறுமோயென்ற கேள்வியை
தன் தலைஎழுத்தாய் சுமர்ந்துக்கொண்டே