இது பூக்களின் தேர்தல்

ஒரே சலசலப்பு
நேற்று அவள் வந்து சென்றதிலிருந்து
என் வீட்டு சோலைப் பூக்களுக்குள்
அப்படியென்னதான் பிரச்சினை உங்களுக்கு?
கொஞ்சம் அதட்டியே கேட்டேன் பூக்களை
வேறொன்றுமில்லை..
வாரிசு ஆட்சி புரிந்த
ரோஜா மலரை
பதவி விலக சொல்லிதான்
பூக்களுக்குள் அந்த சலசலப்பாம்
ஆமாம்
இடைத் தேர்தல் நடத்த வேண்டுமாம்
"அவளை அவைத் தலைவியாக்க"

எழுதியவர் : மணி அமரன் (6-Nov-15, 9:11 pm)
பார்வை : 104

மேலே