காதல் கொண்டேன் - 1

அன்று அந்த அழைப்பு அவளிடமிருந்து,
இன்று இந்த இடத்திற்கு வந்து விடும் படி;
நம் விஷயம் சம்பந்தப்பட்ட அத்தனையும்
எடுத்து வரும்படி ஒரு நிபந்தனையுடன்..

ஏன் அப்படி ஒரு நிபந்தனை
எனக்குள்ளே ஏகத்துக்கும் வினவுகள்;
காதல் கண்மணியை காண ஒரு சந்தர்ப்பம்
கவலை எதற்கு? உள்மனம் ஒரு உறுத்தலுடன்.

இரண்டு வருட நெருக்கம் இடைஇடை சிறு அடக்கம்
மிதமிஞ்சாத சுவையினை மென்மையாய்
கொஞ்சம் தன்மையாய் அளித்து
அங்கு இங்கு நல்ல எண்ணங்களை அள்ளித்தெளித்து
சொல்லிக்கொடுத்த அன்புத்தோழியவள்
என் அகத்தில் உயர்ந்தனள்

இனிக்கும் ஓர் தனிமையில் நெருக்கத்தில்
என்னையும் நான் மீறிட
"எதற்கு அவசரம் எப்படியும் இணைவோம்
நட்பாக ஆரம்பித்தது தானே
நம் உறவு, நட்பாகவே இருக்கும் வரை
தானே அதற்கும் ஒரு கண்ணியம்" -
என்றாள்;

நானும் சரியென்றேன்,
வரம்பை மீறுவது தானே உறவென்றேன்;

"நல்ல காதல் என்பதை நாம் மட்டுமல்ல,
நம்மைப்பார்க்கும் யாவரும் நினைக்க வைப்பதில் தானே
நமக்கும் நம் காதலுக்கும் பெருமை?"
- அவள் வரையறைகளுடன் வாழ்ந்த காதலின் சிறு இடைவேளை.

(இரண்டு மாதம் நாங்கள் சந்திக்காதது அவள் சொந்த ஊருக்கு
சென்றிருந்தது தான் என்று எனக்குத்தெரியும்;
அவள் வீட்டில் அப்படி ஒரு பிரச்சனை !)

எனக்குள்ளே காதல் எத்தகையது என்பது
என் நண்பர்களின் விருப்பமாய் இருந்தது.
இன்று என்ன நடந்தது என்றெல்லாம்
என்னிடம் வினவுதலும் விசாரித்தலும் வழக்கமாய் போனது.

காதல் பெருமையில்
(அபூர்வமானது, அழகானது, அதிர்ஷ்டகரமானது என்று ஒரு நம்பிக்கை)
கிளர்ந்து திளைத்த நான் தானாகவே மகுடம் சூட்டப்பட்டேன், காதலினால்;

காதல் கொண்டேன், காதலியை கண்டதால்,
காதல் என்னை ஆட்கொண்டதும் காதலனானதும்
காதலின் புனிதத்தை புரிந்தேன்,
எல்லைகளில் எங்களை நிறுத்தினோம்;
அதனால் காதலும் கௌரவப்பட்டது;

அந்தக்காதல் அந்த இனிய காதல்
என் உயிர்க்காதலின் அடுத்த அத்தியாயம்

அடுத்து...

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (6-Nov-15, 10:06 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 120

மேலே