வாழ்க்கை

வெற்றியாளர் இன்னாரென்று
தீர்மானிக்கப்பட்டுவிட்டபின்
விளம்பரப்படுத்தபடுகின்ற
பந்தயங்களில் பங்கேற்று
ஏமாற்றங்களை எதிர்பார்த்துக்
காத்திருப்பதுபோலவே
போராட்டங்களோடு
புனைந்தெடுக்கப்பட்ட
துக்கங்கள் புதைத்து தோல்விகள் சகித்து
வலிகள் தாங்கி வருகின்ற
அற்ப சந்தோசங்களின் அருவியில்
குளிக்கின்ற கோடைகால குருவிகளாய்
வாழவேண்டியிருக்கின்றது
நிச்சயிக்கப்பட்ட மரணத்தைக்
கையில் வைத்துக் கொண்டிருக்கும் வாழ்வை.

*மெய்யன் நடராஜ் (இலங்கை)

எழுதியவர் : (7-Nov-15, 2:08 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vaazhkkai
பார்வை : 161

மேலே