நானாக இருந்திட கூடாதென்று- ஆனந்தி

அவ்வளவு
சுலபமாய் யாரையும்
நம்பிடுவதில்லை....

ஏனோ நம்பி
விட்டேன் அவன்
ஒருவனை மட்டும்.....

நாட்களும் நகர்ந்தது
நவரச பேச்சுக்களோடு....

வெகுவாய் மயங்கி
கிடந்தேன் - அவனது
தமிழ் வார்த்தைக்குள்ளா?
வாழ்க்கைக்குள்ளா?

பதில் சொல்லிட
தெரிந்திடவில்லை
எதுவும் நான்
அறிந்திடவில்லை - எனக்கே
ஒன்றும் புரிந்திடவில்லை.....

வாசகர்களுக்கு
விளங்கும்படி சொல்லிட
வழியும்
இல்லை - அதற்கு
தமிழ் எழுத்துகளில்
வசதியும் இல்லை....

பாசமோ? நேசமோ?
இக்கணம்
உடைந்தது மனது.
கண்களின் அணையும்
கூடவே அவனது
நினைவும்....

என் விழி நீர்
பட்டதில் அழிந்திடுமோ
எழுதி கொண்டிருக்கும் எழுத்துக்கள்.
தமிழும், என்
கண்ணீரும் - அவனது
நலம் விரும்பி
என்பதினால்.....

ஒன்று மட்டும் புரிந்தேன்
என் சிந்தைக்குள்
தெளிந்தேன் - இனி
அவனது மகுடிக்கு
ஆடிடும் பாம்பு நானாக
இருந்திட
கூடாதென்று...

எழுதியவர் : ஆனந்தி.ரா (7-Nov-15, 1:26 am)
பார்வை : 259

மேலே