என்னை மறந்தே போனாளோ
மணிமாலா மணிமாலா
என்னை மறந்தே போனாளோ!
கதிர்வேலோ வடிவேலோ
பின்னே பறந்தே போனாளோ!
தனியாளா தவிக்கவிட்டு
துக்கம் கொடுத்தே போனாளோ!
விழிமூடும் பொழுதெல்லாம்
தூக்கம் கெடுத்தே போனாளோ! (மணிமாலா... மணிமாலா...)
எனக்கெனவே பிறந்தவளாய் - அவளை
எனக்குள் வச்சிருந்தேன்...
அவளுக்கெனவே பிறந்தவனாய் - என்னை
தப்பாய் நெனச்சிருந்தேன்...
விதிவசமா சதிவசமா - இப்போ
பிரிஞ்சே போனாளே...
மதியிழந்தே நான்கிடக்க - எப்போ
மீட்க வருவாளோ...
மணிமாலா... மணிமாலா...
காத்திருக்கேன்... வெகு நாளா... (மணிமாலா...மணிமாலா...)
என்னென்னவோ பேசியவ - என்னை
பிரிவான்னு சொல்லலையே...
கண்ணுமணி மேலேறி - அமிலம்
எறிவான்னு சொல்லலையே...
என்காதல் சத்தியமே - இதுவரை
எனக்குள் பத்திரமே...
உன்காதல் பிடுங்கிகிட்ட - இதயம்
இருண்ட சத்திரமே...
மணிமாலா... மணிமாலா...
காத்திருக்கேன்... வெகு நாளா... (மணிமாலா...மணிமாலா...)
தள்ளிவிட்டு போனதென்ன - தனியே
தவிக்க விட்டதென்ன...
கல்லாட்டம் நெஞ்சுக்காரி - என்னை
கலங்கச் செய்ததென்ன...
உன்நினைப்பால் உள்ளுக்குள்ளே - ஓடும்
உதிரம் குத்துதடி...
புல்லுமேல பனிபோல - உசுரும்
உதிர நிக்குதடி...
மணிமாலா... மணிமாலா...
காத்திருக்கேன்... வெகு நாளா... (மணிமாலா...மணிமாலா...)