எனக்கொரு கவிதை வேண்டும்

கண்ணீர் தந்திடும் ஒரு கவிதை வேண்டும்
கண்ணீர் துடைக்கவும் ஒரு கவிதை வேண்டும்

சிரிப்பை தந்திட ஓரு கவிதை வேண்டும்
சிந்தனை தூண்டிட ஒரு கவிதை வேண்டும்

குழம்பி போகும் ஒரு கவிதை வேண்டும்
குழப்பம் தீர்க்கவும் ஒரு கவிதை வேண்டும்

பசிக்கு மருந்தாய் ஒரு கவிதை வேண்டும்
ருசிக்கு விருந்தாய் ஒரு கவிதை வேண்டும்

வலிகள் தந்திடும் ஒரு கவிதை வேண்டும்
வலிகள் தீர்க்கவும் ஒரு கவிதை வேண்டும்

சுடும் வெயிலாய் ஓரு கவிதை வேண்டும்
கடும் குளிராய் ஒரு கவிதை வேண்டும்

மலர் போல் மென்மையாய் ஒரு கவிதை வேண்டும்
மலைப் போல் வலிமையாய் ஒரு கவிதை வேண்டும்

அன்பை பொதிந்து ஒரு கவிதை வேண்டும்
அச்சம் கொள்ளவும் ஒரு கவிதை வேண்டும்

மழலையின் மொழியாய் ஒரு கவிதை வேண்டும்
மனைவியின் மடியாய் ஒரு கவிதை வேண்டும்

தமிழ்ப் போல் இனித்திடும் ஒரு கவிதை வேண்டும்
தாய்ப் போல் வணங்கவும் ஒரு கவிதை வேண்டும்

இத்தனைக் கவிதைகள் மொத்தமாய்க் கேட்டதால்
காதலை கவிதையாய் கையில் தந்தாயோ

கண்ணீர் தந்திட்ட கவிதை ஒன்றை
கண்ணீர் துடைக்கும் முன் களவும் கொண்டாயோ?

எழுதியவர் : மணி அமரன் (7-Nov-15, 12:04 pm)
பார்வை : 276

மேலே