எனைமுழுதாய் மறந்திட்டாய்

என்னை முழுதாய்
"புரிந்திட்டாய்" என நான் நினைக்க‌
நீயோ எனைவிட்டு
"பிரிந்திட்டாய்"

எனது வலிக்கு
"மருந்திட்டாய்" என நான் நினைக்க‌
நீயோ எனைமுழுதாய்
"மறந்திட்டாய்"

என்னை மனதார‌
"அணைத்திட்டாய்" என நான் நினைக்க‌
நீயோ என்வாழ்க்கையையே
"அணைத்திட்டாய்"

என்னை விரும்பிநீ
"நேசித்தாய்" என நான் நினைக்க‌
என்னை பார்க்கவேநீ
"யோசித்தாய்"

என்னிதயம் முழுதாக‌
"வாசித்தாய்" என நான் நினைக்க‌
எனைவிட்டு யாரையோநீ
"சுவாசித்தாய்"

உன்காயம் ஆறநான்
"பழுதிட்டேன்" முன்பு உனக்காக‌
வெங்காயம் எனச்சொல்லிபிரிந்தவுடன்
"அழுதிட்டேன்"

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Nov-15, 7:46 am)
பார்வை : 633

மேலே