மதம் அறு மரம் அறுக்காதே
![](https://eluthu.com/images/loading.gif)
தூதுசெல் கிளிகள் கூட்டைத்
..........துயரறத் தாங்கும் காட்டை
ஓதுநல் ஒழுக்கம் தன்னை
..........உதறிய கொடியோர் ஆகிச்
சூதுசெய் மாந்தர் வாளால்
..........துண்டுகள் ஆக்கிப் போனால்
ஏதுநல் ஏற்றம் இங்கே
..........எடுத்ததைச் சொல்வீர் இன்றே !
இதமறுந் துவழும் போதும்
.........இன்னலைத் தாங்கும் போதும்
எதைமறந் தலையும் போதும்
.........எழிலுற எழுதும் பாட்டின்
பதமறுந் துடைபொரு ளேகிப்
.........பாடுநர் திட்டும் போதும்
மதமறு மண்ணில் வாழும்
.........மகிழ்தரு மரமறுக் காதே !