ஒளிபெற வேண்டும்
சாதி தொலைந்திட வேண்டும் – சம
நீதி நிலைத்திட வேண்டும் ! – நெஞ்சில்
சூதினர் ஆரியர் சூட்டியப் சூத்திரப்
பேரை மடித்திட வேண்டும் – தமிழன்
பேரை எடுத்திட வேண்டும் !
பொய்மை அழிந்திட வேண்டும் – என்றும்
மெய்மை எழுந்திட வேண்டும் ! மூடர்
கையினில் கருமையாய் கருத்தினில் ஊறிய
மடமை களைந்திட வேண்டும் – அறிவு
வளமை துளிர்த்திட வேண்டும் !
பழமை அறிவுற வேண்டும் – இங்கு
புதுமை எழில் பெற வேண்டும் ! – நாற்ற
அழுகினச் சரித்திரக் குப்பைகள் புதைகுழி
ஓடி ஒடிங்கிட வேண்டும் – அவை
வாடி வதைங்க்கிட வேண்டும் !
தந்தை வழிசெல வேண்டும் – அவன்
தந்த மொழிகொள வேண்டும் – தமிழன்
சிந்தையில் ‘திருவிடம்’ தந்து ‘பகுத்தறி(வு)’,
ஏற்றிடும் நிலைவர வேண்டும் ! – அவை
போற்றிடும் ஒளிபெற வேண்டும் !