வின் என்று விறைத்து

வின் என்று விறைத்து நின்றது அறிவு
வின் என்ற அறிவில் பிறந்து வந்தது ஒரு சிந்தனை
வின் எனும் சிந்தனையில் விசையுறு பந்தினைப் போலே
சுழன்று உயர்ந்தது உள்ளம்
வின் என்று உயர்ந்த விசையுறு உள்ளம்
விண்ணையும் தொட்டுப் பார்த்தது !

---க வின் சாரலன்

வின் யாப்பிலும் வரும்

வின்னென் றுவிறைத்து நின்ற அறிவினில்
வின்னென் றுபிறந்து வந்தது சிந்தனை
வின்னெனும் சிந்தனை யோர்விசைப் பந்தாகி
வின்னெனும் உள்ளம் சுழன்று உயன்றந்த‌
விண்ணையும் தொட்ட துவே !

---ப ஃ றொடை வெண்பா

எழுதியவர் : க வின் சாரலன் (9-Nov-15, 8:10 am)
பார்வை : 75

மேலே