திரும்ப வருமோ விரும்பும் பருவம்

திரும்ப வருமோ விரும்பும் பருவம்
வருமோ அறியேன் வரமும் பெறவே
விரும்பும் வரமும் விமலா வழங்கு
பருவம் பெறவே வழங்கு .

சரமழை வித்தகம்
```````````````````````````
மரபுக் கவிதை வித்தகம்: சரமழை
[சரம் கிடைநிலையாக நேரே செல்லும்; மழை நெடுநிலயாகக் கீழே விழும். அதுபோல் வெண்பாவை வலம்-இடமாக, மேல்-கீழாகப் படித்தால் அதுவே வரும்.]

முற்றிலும் புளிமாச்சீர் கொண்டு மொத்தம் ஒன்பது சீர்கள் கொண்டு கீழ்க்கண்ட வகையில் அமைக்கலாம்.
1 2 3 4
2 5 6 7
3 6 8 9
4 7 9
1 5 8 சீர்கள் ஒருமுறையும்
2 3 4 6 7 9 சீர்கள் இருமுறையும் வரும்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Nov-15, 3:41 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 58

மேலே