விஞ்ஞானம் - போட்டிக் கவிதை - எது விஞ்ஞானம்
ஆணும் பெண்ணும் சேராமல்
அழகாய் குழந்தை பிறக்கிறது
அதன் பெயர் விஞ்ஞானம்
கண்ணும் கண்ணும் கலவாமல்
காதல் இங்கே நடக்கிறது
அதன் பெயர் விஞ்ஞானம்
பக்கம் கிரகம் என்றே
பறந்து சென்று வருகிறான்
அதன் பெயர் விஞ்ஞானம்
செயற்கையாக இரத்தம் செய்கிறான்
செத்தவனை மீட்கவும் முயல்கிறான்
அதன் பெயர் விஞ்ஞானம்
காற்றிலிருந்து கடல் அலையிலிருந்து
மின்னல் கீற்றிலிருந்து மின்னெடுக்கலாம்
அதன் பெயர் விஞ்ஞானம்
எந்திர மனிதனை ஏவிவிட்டு
எந்த வேலையும் செய்யலாம்
அதன் பெயர் விஞ்ஞானம்
கால் நடந்து போகாமல்
கடைச் சாமான்கள் கதவைத் தட்டும்
அதன் பெயர் விஞ்ஞானம்
அன்பை தொலைத்து விட்டு
அத்தனையும் கண்டு கொண்டான்
அதன் பெயர் விஞ்ஞானம்
மண்ணுயிர்க்கு தீங்கு இன்றி
மகிழ்ச்சித் தரும் ஆக்கம் யாவும்
மனிதன் கானும் விஞ்ஞானம்
மனிதம் தொலைத்து விட்டு
மண்ணுயிர்க்கு தீங்கிழைத்தால்
அதன் பெயர் "வீன் ஞானம்"