தலைவிதி

பெண்ணே உன் கற்புதான்
நம் நாட்டின் சிறப்புதான்
யார் விட்ட சாபமோ
அழிகின்ற கோலமாய்
பெண்களை தெய்வமாய்
ஏந்திய ஏடுகள் அழுதே

பெற்ற மகளை விற்றாயினும்
உற்ற மனைவியை ஊருக்கு பகிர்ந்தளிதும்
காலமும் நேரமும் இன்றி குடியாய் குடித்து
காம போதையில் அலையும் காட்டுமிராண்டிகள்
மனிதரில்லை அவை
பிணங்கள் தின்னும் பேய்கள் அன்றோ

பாரினுள் பெண்களில் தாய் தங்கையென்றுண்டா
படுக்கையில் குடியுடன் பந்த பாசங்கள் வேண்டா
என்றென்னும் வெறி நாய்கள் வாழும் இந்நாட்டிலே
ஒன்றேதான் மனைவி என்பது ஏட்டில் மட்டும் ஆனதே
தடம் மாறி செல்லும் இந்த சமுதாயமே
பெண்களை தினம் செய்யும் பெரும்காயமே
பெண்ணென பிறந்ததும் பெரும் குற்றமா

பெண்ணொருத்தி ஆபரணம் சூடி நடு இரவிலே
சென்றுவிட்டால் உண்மையிலே அன்றுதானே சுதந்திரம்
என்று சொன்ன காந்தி கூட இன்று மட்டும் இருந்துவிட்டால்
கொன்றிடுவார் கயவர் தம்மை அஹிம்சை விதி மீறியே

பொழுதுபோக்காய் பலாத்காரம் செய்யும் பரத்தை மகன்களும்
பழுதில்லாமல் வாழ்க்கையை வாழத்தானே செய்கிறார்
பார்த்துக்கொண்டே அமைதி காக்கும் பகவானே ஆண்டவா
பாரினிலே உள்ளாயோ உன்னை வணங்கத்தான் வேண்டுமோ - இல்லை
போரினிலே சைத்தானுடன் தோற்றுதான் இறந்தாயோ

உலகில் நிறைய பேருக்கு.....

வயிற்று பசிக்கு உணவில்லை
வாழ்கைக்கு துணையும் இல்லை
அறிவு பசிக்கு தீனியில்லை
அம்மா என்றழைக்க யாருமில்லை
உற்றாரும் இல்லை
பெற்றோரும் இல்லை
இல்லை இல்லை
இல்லை இல்லை

இவையெல்லாம் அவர்களின் தலைவிதி

வெட்கமில்லா வெறிநாய்களின் காம பசியால்
சக்கையாகும் எத்தனையோ சகோதரிகள்
ஏன் இந்த கொடுமை என்று கேள்வி கேட்டால்
விடையாக வரும் வார்த்தை "தலைவிதி"

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (9-Nov-15, 11:42 pm)
Tanglish : thalaivithi
பார்வை : 150

மேலே