வார்த்தைக்குள் அடங்காதவள்

அவளை நான் எப்படி வர்ணிக்க
ஒளியில் தெரியும் இருண்ட
சூரியன் அவள் கண்கள்...

எத்தனை நிறங்கள் இருப்பினும்
அவளின் நிறத்தை விவரிக்க
வார்த்தைகளிடையே சண்டை,

முகப்பூச்சுக்கே முகமெல்லாம்
வாடியது,
அவள் முகத்தை பார்த்தவுடன்,

ஒரு நொடி பார்த்ததும் மறு நொடியும்
கண்கள் கட்டுபாடின்றி அவளது
முகத்தை காண துடிக்கும், அப்படியோரு முகம்,


மனசெல்லாம் மன்றாடும்
அவள் முகத்தை காண

மதியே அவளைக்கண்டு மதியிழந்து
இது என்ன விதியா இல்லை காலத்தின்
சதியா தன்னை விட அதிக ஒளிபடைத்த
அவளின் விழியை கண்டவுடன்
வழி தவறி இந்த வளியை விட்டே
வேறு உலகத்திற்கே சென்றது
ஆச்சரிமில்லா நிகழ்வு...

எழுதியவர் : கலீல் (9-Nov-15, 10:33 pm)
சேர்த்தது : கலிலுல்லா
பார்வை : 230

மேலே