தீபாவளி

தீபாவளி...!

புனித மிகு -
தீபவொளி
சிதற...
வெளி -
உலவுமிருள்
மிரள...
புலரும் -
பனி விடியல்
தருமழகே..!
தீபாவளி...!

பச்சை
மருதாணி
பதமாக
முத்தமிட்ட...
இச்சையினால்
இதழ்சிவப்பாய்
விரியும் விரற்
கையழகே...!
தீபாவளி...!

எண்ணமெல்லாம்
இனிக்கும்...
பசும்நெய்யினிலே
குளிக்கும்...
சீனியுடன்
தேன் கற்கண்டு
சர்க்கரைப்பாகாலே
பிறக்கும்...
வகைவகையாய்
சிறக்கும்...
வண்ணவண்ண
இனிப்பழகே...!
தீபாவளி...!

எண்ணை -
தேய்ப்புடனே...
இதமான
வெந்நீர் குளியலிட்டு..
பலகாரப் -
படையலின்
பந்தியிலே
முந்தியிருந்தோடி...
பகட்டாக
புத்தாடை
எடுத்துடுத்திப்பின்...
பட்டாசு
கொளுத்துகின்ற
பரபரப்பு ...
என
பரிமளிக்கும்
பால்ய அழகே...!
தீபாவளி...!

எழுதியவர் : இராக. உதயசூரியன். (10-Nov-15, 11:49 am)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 221

மேலே