நெற்றி பொட்டு

கொஞ்சம் கனவில் ஒரு தீயின் வெளிச்சம்
அகலாய் அது ஆனபோது
பகலாய் கண்கள் பார்க்கிறதே

இமைகள் மூடி இருந்த போதும்
விழிகள் ஓய்ந்து தூங்கும்போதும்

இடையிடையே புரள்கையில்
ஏதோ தலையணை தழுவுகையில்

தாயின் மடியில் குழந்தை போலே
தனக்குதானே தகப்பன் போலே

ஆறறிவு தேடும் அன்பில்
அன்னையும் தந்தையும் தானேயென்று

ஆன்ம வெளிச்சம் அகலாய் மாற
அகிலம் முழுதும் உள்ளுக்குள்ளே

பகலில் நிலவு பார்ப்பது போலே
படிப்பறிவில் கற்ற ஞானத்திலே

வேலை நேர தூக்கத்திலே
வேடிக்கை பார்க்குதே நெற்றி பொட்டு


எழுதியவர் : . ' .கவி (8-Jun-11, 9:23 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 969

மேலே