திருக்குறளின் சிறப்புகள்
திருக்குறளின் சிறப்புகள்
-------------
திருக்குறள்திருவள்ளுவர்திருவள்ளுவர் ஆண்டு
திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்களை பார்ப்போம்.
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
இவரது ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது இறுதி.
திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எ.கா: 2013 +31 = 2044 (கி.பி.2013-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்)
* திரு+குறள்= திருக்குறள்
* திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
* திருக்குறள் இரண்டு அடிகளால் ஆன குறள் வெண்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.
* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71) குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)
* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
வாணிஸ்ரீ சிவகுமார் -