அனுசரிச்சு போக மாட்டாரு

கல்யாணத்தை ரொம்ப கிராண்டா நடத்தறாங்களாமே?

ஆமா! நலங்கு உருட்டற விளையாட்டையே நேரு ஸ்டேடியத்தில வெச்சிருக்காங்கன்னா பார்த்துக் கோயேன்!

சு. கவுதமன்.
-------------------------------------

அந்த ஆள் ஆபிசுல யாரோடையும் அனுசரிச்சு போக மாட்டாரு!
நிஜமாகவா?

ஆமாம்! ஆபிஸ்ல அவரு மட்டும் தூங்காம வேலை செய்வாரு!
வி.சாரதி டேச்சு.
-----------------------------------------

உன் மாமியார் எப்படி?

புருஷன் இருக்கும் போது தலை வாரி விடுறாங்க!.. இல்லாதப்ப காலை வாரி விடறாங்க!

தஞ்சை தாமு.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (11-Nov-15, 8:37 pm)
பார்வை : 63

சிறந்த நகைச்சுவைகள்

மேலே