ஒரு தலை காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு தலை காதல் - கவிதை
___________________________
உண்மை கூற வார்த்தை தேடி
அலைந்ததுவும் உண்மைதான்
வேண்டா இந்த காதலென்று
புரிந்ததுவும் நேற்றுதான்.....
பிரியாது வாழ்ந்திடவே
நினைத்தது என் கனவுதான்
நெஞ்சமது அவனிடத்து
இணைந்ததுவும் இயல்புதான்
இளைஞனவன் அழகை கண்டு
துள்ளியது என் உள்ளம்தான்
உரிமையுடன் அவனை நாட
தடுத்ததுவும் என் வெட்கம் தான்..
மென்மையான மனதினிலே
முள் தைத்ததுவும் புதுமைதான்
திருமணத்தில் முடியும் எந்தன்
நினைவதுவும் தவித்ததுதான்
தருணத்தில் விதி வந்து
வீழ்த்தியது என் நினைவைத்தான்
விளங்காத காதலதை
புதைததுவும் என் திறமைதான்
விரும்பிய வாழ்வதையும்
வதைத்தது அவன் உள்ளம்தான்
ஒருதலை காதலென்று உரைப்பது
மன வேதனைதான்......
திருமதி. மைதிலி ராம்ஜி