யாதுமானவனே - ஆனந்தி

நேற்று இன்று
நாளையும் மறந்தேன்
மொத்தமாய்....

முதல் புறக்கணிப்பில்
வருத்தம்
இப்பொழுது பழகிவிட்டது
வெகுவாய்....

என் மௌனத்தில்
என்னையே - மறந்தேன்
மரத்தேன்....

சிம்மாசனத்தில் ஏற்றியவன்
அகல பாதாளத்தில்
தள்ளிவிடுகிறான்....

ஆசை காலத்தை எறிந்து
ஆயுத காலத்தை ஏந்தி
நிற்கிறேன்....

நெடுந்தவம் கலைத்து
மூன்றாம் விழி திறந்ததில்
சபிக்கப்பட்டேன்(னா?)
அவனால்....

என் அடையாளத்தை
எங்கே தொலைத்தேன்
அவமானம் ஏந்தி நிற்கிறேன்....

நேசம் பட்டதிலா?
நேசிக்கப்பட்டதிலா?

ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை.
அவனின்றி நானும்....

யார் எதை யோசிக்கும்
வேளையிலும் நான் மட்டும்
அவனையே யாசித்துக் கிடக்கிறேன்....

எழுதியவர் : ஆனந்தி.ரா (14-Nov-15, 5:36 am)
பார்வை : 223

மேலே