மீண்டும் மீண்டும்-1

பல
இன்னல்களின்
பின்னல்களை
கடந்து
செல்வதில்
மீண்டும் மீண்டும்
சிலந்தியாக நான்........

கடந்து செல்லும்
பாதைதனில் இடையே
கரைந்து போனாலும்
கரையை அடைந்து
விடுவதில்
மீண்டும் மீண்டும்
அலைகளாக நான்.......

விண்ணில்
புறப்படும் முன்
மறைந்து போனாலும்
நீர்த் துளி
மண்ணை அடைவதில்
மீண்டும் மீண்டும்
கூடும் மேகக்
கூட்டமாய் நான்......

எண்ணற்ற முறை
எண்ணங்கள் இங்கே
நொறுங்கி போனாலும்
இலக்கை அடைவதில்
மீண்டும் மீண்டும்
தாமஸ் ஆல்வா எடிசன்
பரம்பரையாய் நான்.........

எந்தன்
தோள்கள் சுகமென
தோல்வியே இவன்
தோழன் ஆனாலும்
வெற்றியை அடைவதில்
மீண்டும் மீண்டும்
முகமது கஜினியாய் நான்......

உண்மையாய்
உழைப்பவனுக்கும்
வாழ்வில்
உயர்ந்தவனுக்கும்
தாரக மந்திரமாய்
அமைவதில்
மீண்டும் மீண்டும்
முயற்சியே நான் ஆவேன் !......


- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (14-Nov-15, 1:47 pm)
பார்வை : 235

மேலே