அன்புடன் வளர்ந்திடு

அன்புடன் வளர்ந்திடு ( குழந்தைகள் தின சிறப்பு )
-----------------------------------------------------------------------------

அத்திப் பழமே அன்னக் கொடியே
--அங்கே என்ன பார்வையோ
தத்தித் தாவும் தத்தைப் பறவை
--தங்கக் கூட்டில் தூங்குதோ

அப்பா அம்மா அண்ணன் உறவு
--அதற்கும் உண்டு கேட்டிடு
இப்போ அவரும் எப்படி அழுவார்
--எண்ணிக் கொஞ்சம் பார்த்திடு

அடைத்து முடக்கி அழகை ரசித்தல்
--ஆணவம் என்றே உணர்ந்திடு
அடடா உனக்கது ஆகா தம்மா
--அன்பை மட்டும் வளர்த்திடு

பட்டுத் துணியும் பாசம் தருமோ
--பசியும் தீர்த்தால் போதுமா
விட்டுப் பாரதை விட்டம் தாண்டும்
--விடுதலை அதுவே தானம்மா

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (14-Nov-15, 4:26 pm)
சேர்த்தது : மீ மணிகண்டன்
Tanglish : anbudan valarnthidu
பார்வை : 4714

மேலே