மழை - 2
அரசாளுமையையே
கேள்வி கேட்கும்
திராணி வந்தது
இந்த மழைக்கு.
மெட்ரோ ரயிலை மட்டுமே
இயங்க அனுமதித்த
இந்த மழை உருவாக்கிய
வேகத்தடங்கள் எத்தனை
கண்ணுக்குத்தெரியாமல்..
இதற்கு முன் இங்கே
ஒரு ஆறு இருந்ததென
அடையாளமிட வந்த போது
ஆச்சரியப்பட்டவர்கள் உண்டு,
அடித்து செல்லப்பட்டவர்களும் உண்டே!
நான் தாண்டா மழை...
சும்மா அதிருதில்லே?