கனவு ~ சகா

எழுந்தவுடன்
கலைந்துவிடும்
ஒப்பனை...

எழுதமுடியா
திரைக்கதையின்
இலவச இணைப்பு...

சர்ச்சைகளில்லா
சாகசத்தின்
கோட்டை...

உடலில்லா உண்மைகள்
உலா வரும்
ஊர்வலம்...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (14-Nov-15, 10:40 pm)
பார்வை : 344

மேலே