நினைவின் ஞாபகங்களுடன்
காகிதமாய் போன
என் காதலின்
கல்லறையின்
சின்னமாய் போனது
உன் ஞாபகம்
கலந்து பேசிய
காலம்
உறைந்து கிடக்கின்றது
என்
எண்ணங்களாய்
சீதை போன்று
பேசியவல்
என்னை
அனாதையாய்
தவிக்கவிட்டு
படகு மூழ்கிய
கப்பலாய்
புதைந்து கிடக்கிறேன்
உன் நினைவில்
நினைவில் வைத்து
கனவில் நீந்தி
எழுதுகிறேன்
என் கவிகளும்
கூட உயிர்
அற்று போகின்றது
உன் தனிமையின்
ஞாபகங்களை
சுமந்து
கொண்டு......!
கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பொத்துவில் -

