அரும்புகள் -கயல்விழி

மனங்களை வருடிடும்
நந்தவனங்கள் .
மாயம் செய்திடும்
வானவில்கள் .

கடவுள் செதுக்கிய
சிற்பங்கள்
கண்சிமிட்டும்
ஓவியங்கள் .

தோகை இல்லா
வண்ண மயில்கள் .
சோகம் தீர்க்கும்
செல்லக்குயில்கள்.

துள்ளி நடந்திடும்
புள்ளி மான்கள்.
மின்னிச் சிரித்திடும்
விண்மீன்கள் .

பாலினை மிஞ்சிய
வெள்ளை மனங்கள்
பகைவருக்கும் உதவிடும்
நல்ல குணங்கள் .

அழகிய குடும்பத்தின்
ஒளி விளக்குகள்
குழந்தையென வளர்ந்திடும்
மென் அரும்புகள் .

எழுதியவர் : கயல்விழி (15-Nov-15, 4:23 pm)
பார்வை : 210

மேலே