வின் ஞானம் - போட்டிக் கவிதை

வின் ஞானம் !
எல்லாம் உனக்குள்ளே
தேடுவாய் உனக்குள்
உன்னை அறி
எல்லாம் புரியும்
அஞ்ஞானம் அறியாமை
இருள் நிறைந்தது
விஞ்ஞானம் அது
பௌதிக ஞானம்
மெய்ஞானம் அறிந்தால்
எல்லாம் அறிந்திடுவாய்
நீயே அதுவாகிறாய்
அதுவே பேரின்பம்!

எழுதியவர் : பொன் அருள் (16-Nov-15, 6:56 pm)
சேர்த்தது : பொன் அருள்
பார்வை : 80

மேலே