உரிமைகள் பரிக்கப்படும்

வேர் இங்கே விதை அங்கே
வேறுவேராய் இருக்க..
கூறுபோட்டு எம்இனத்தை
சிங்களவன் குவிக்க,
உரிமைகள் கேட்டு போராடும்
பெருமை கொண்டஎம் இனம்.
மடமை மனிதசெயலால் அங்கே
எரிகிறது தமிழ் பிணம்.
நம்பிக்கை இல்லாத இரவுகள்..நாளும்
விடுதலை கனவுகள்.
அச்சம் மக்களை ஆட்டிப்படைக்க..
கச்சத்தீவினை நமதென உரைக்க,
உயிர்கள் ஒன்றாய் ஒன்றிடுவோம்.
எழுந்திரு தமிழா வென்றிடுவோம்.
பரித்த உரிமையை மீட்டிடுவோம்.
இப்பாருக்கு நம்மை காட்டிடுவோம்.

எழுதியவர் : கு.தமயந்தி (16-Nov-15, 6:38 pm)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 87

மேலே