மீண்டும் மீண்டும்

மொழி தெரியாமல் பேசும் பிள்ளை நெஞ்சம் வேண்டும்....
காயம் கண்டாலும் கலங்காத நெஞ்சம் வேண்டும்....
விளையாட்டாய் அழுதிட அண்ணன் முகம் வாடிட ரசித்து கொஞ்சம் சிரிக்க வேண்டும்....
சின்ன சின்ன சண்டை வேண்டும்....
செல்லமான தந்தையின் கண்டிப்பு வேண்டும்....
விட்டுக்கொடுக்காத அன்னையின் அன்பு வேண்டும்....

மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும் என்னைத் தாங்கும் இந்த சொந்தம் வேண்டும்....





!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (16-Nov-15, 10:36 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : meendum meendum
பார்வை : 50

மேலே